வாஷிங்டன், 26 அக்டோபர் 2026 : அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள புளோரிடா வேளாண்மை மற்றும் இயந்திரவியல் பல்கலைக்கழகத்தின் (Florida A&M University) அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்ததால், மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்ற சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச்சூட்டில் முடிந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள பெர்ரி தெருவில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்ததால் மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் குறைந்தது மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்ற ஒன்பது பேர் சீரான நிலையில் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.







