அமிதாபச்சனிடம் பாராட்டு வாங்கிய சகோதரர்கள்

அமிதாபச்சனிடம் பாராட்டு வாங்கிய சகோதரர்கள்

9

நிகழ்ச்சியில் இதுவரை யாரும் ரூ.7 கோடி பரிசுத்தொகையை பெறவில்லை. ஆனால் டெல்லியைச் சேர்ந்த அச்சின் மற்றும் சர்தக் நருலா என்ற சகோதரர்கள், 4 ‘லைப்லைன்’ உதவியுடன் இந்த கேள்விகளுக்கு பதிலளித்து ரூ.7 கோடியை வென்றுள்ளனர்.

நடிகர் அமிதாப்பச்சன், தனது ‘டுவிட்டர்’ இணையதளத்தில் அவர்களை பாராட்டி எழுதியுள்ளார். அதில் அவர், ‘சகோதரர்கள் இருவரும் ஒரு குறிக்கோளுடனேயே இந்த விளையாட்டில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே அவர்கள், ஒரு முன்மாதிரியாக விளங்கினர். அவர்கள் தங்களுடைய ‘லைப்லைன்’களை பயன்படுத்தினாலும், உதவி கேட்பதற்கு முன்னரே, கேள்விகளுக்கு பதிலளித்தனர்’ என்று கூறியுள்ளார்.