என் தமிழ்

இந்தியாவுடனான நல்லுறவு இஸ்ரேலுக்கு வலுசேர்க்கிறது : நெதன்யாகு

ஜெருசலேம், 20 அக்டோபர் 2026 : இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் சர்வதேச அளவில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஜெருசலேமில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இஸ்ரேலின் பாதுகாப்புக் கொள்கை குறித்துப் பேசிய அவர், அமெரிக்காவில் எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட அதிபர் ஒருவர் பதவிக்கு வரக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இஸ்ரேல் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்காவுடனான உறவைப் பேணுவதுடன், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுடனும் கூட்டணியை விரிவுபடுத்த வேண்டும் என்று நெதன்யாகு தெரிவித்தார்.

“சக்திவாய்ந்த நாடான இந்தியாவுடன் இஸ்ரேலுக்குச் சிறப்பான நல்லுறவு உள்ளது. இதனால் சர்வதேச அளவில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படவில்லை. இஸ்ரேல் மீது இந்திய மக்களுக்கு தனி அன்பு உள்ளது” என்றும் அவர் கூறினார்.

Scroll to Top