கோலாலம்பூர், 19 அக்டோபர் 2026 : கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தின் (KLSICCI) YES மற்றும் WEDC குழுக்கள் இணைந்து நடத்திய பேட்மிண்டன் மற்றும் வணிகத் தொடர்பு நிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நட்புறவுடன் நடைபெற்ற பேட்மிண்டன் விளையாட்டைத் தொடர்ந்து, வணிகத் தொடர்புகளை மேம்படுத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், YES குழுத் தலைவர் வர்மன் காந்தசாமி தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, KLSICCI தலைவர் வி.கே.கே. ராஜசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
KLSICCI துணைத் தலைவர் மோகனா சின்னத்தம்பி, கௌரவப் பொதுச் செயலாளர் டோனி கிளிஃபோர்ட் தாமஸ், உதவிக் கௌரவப் பொதுச் செயலாளர் பிரவின் செல்வம் மற்றும் மன்ற உறுப்பினர்களான டத்தோ சாண்ட்ரா சேகரன், டாக்டர் இஸ். செல்வராஜூ ஹோரிகிருஷ்ணா, டி.எஸ். கிரிஷ் மாதவன், ஜெயா ராஜமாணிக்கம், செல்வராஜ் ஆசிர்வாதம் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வணிகத் தொடர்பு அமர்வில் பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், தங்களது வணிக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, தொடர்பு விவரங்களைப் பரிமாறிக் கொண்டனர். எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று ஆதரவளித்த அனைவருக்கும் KLSICCI நன்றியைத் தெரிவித்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் உறுப்பினர்களிடையே வணிகத் தொடர்புகள், ஒத்துழைப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.







