ஜெர்மனி, 19 அக்டோபர் 2026 : 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச டென்பின் பந்துவீச்சு உலகக் கோப்பைப் போட்டியில், மகளிர் பிரிவில் மலேசிய வீராங்கனை நடாஷா ரோஸ்லான் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் அக்டோபர் 13 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்றில், பிரான்ஸ் வீராங்கனை மனோன் கிளெமென்ட் தங்கப் பதக்கத்தை வென்றார்.
மலேசியாவின் நடாஷா ரோஸ்லான் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்வீடனின் நோரா ஜோஹன்சன் மற்றும் அமெரிக்காவின் ஷானன் புளூஹோவ்ஸ்கி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றினர். சர்வதேச அரங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற நடாஷா ரோஸ்லானுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.







