பினாங்கு, 10 அக்டோபர் 2026 : மலேசிய இந்து சங்கத்தின் ஜார்ஜ்டவுன் உள்ளூராட்சி மன்றம், மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநில மன்றத்தின் சமய மற்றும் ஆலயப் பிரிவு மற்றும் பினாங்கு குயின் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஆகியவை இணைந்து “தெய்வீக மறுசுழற்சி திட்டம் 2026” நிகழ்ச்சியை நடத்துகின்றன.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, பினாங்கு குயின் ஸ்ட்ரீட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை மற்றும் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன், பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் சமூகத்தின் பங்களிப்பை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மறுசுழற்சி, மறுபயன்பாடு, கழிவுகளைக் குறைத்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் இம்முயற்சியில் பொதுமக்கள் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தூய்மையான, பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








