சிலாங்கூர், 09 அக்டோபர் 2026 : காற்று மாசுக் குறியீடு (IPU) 180ஐத் தாண்டியதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று, அக்டோபர் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை இயக்குநரின் ஆரம்பகட்ட அறிவிப்பின்படி, காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறும், முகக்கவசம் அணியுமாறும், வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தனிப்பட்ட சுகாதாரத்தையும் சுற்றுப்புறத் தூய்மையையும் பேணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிகரிக்கும் சூழலில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.







