என் தமிழ்

‘SeRasa SeRasi’ : ஜோகூர் பாருவில் சீன–இந்தியக் கலைகளை இணைத்த பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி

ஜோகூர் பாரு, 30 ஆகஸ்ட் 2026 : சீன மற்றும் இந்தியக் கலை மரபுகளை ஒரே மேடையில் இணைத்து, கலாச்சார ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் ‘SeRasa SeRasi’ எனும் பிரம்மாண்டக் கலை நிகழ்ச்சி மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா ஸரித் சோபியா ஓபரா அரங்கில் நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் உட்பட மொத்தம் 35 கலைஞர்களும் மேளக் கலைஞர்களும் பங்கேற்றனர். எட்டு மாத காலத் தயாரிப்புக்குப் பிறகு அரங்கேறிய இந்நிகழ்ச்சி, இசை மற்றும் நடனத்தின் வழியாக இரு கலாசாரங்களின் கலைச் சிறப்புகளையும் வெளிப்படுத்தியது.

இசை இயக்குநராக டாக்டர் கானாவேணோதன் ரெட்னமும், கலை மற்றும் படைப்பாக்க இயக்குநராக டாக்டர் அஜித் பாஸ்கரும் பணியாற்றினர். இவர்களின் வழிகாட்டுதலில் உருவான நிகழ்ச்சி, இசை, நடனம் மற்றும் கலைநிகழ்வுகளால் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியது.

வெவ்வேறு இனங்களின் கலை மரபுகள் ஒன்றிணையும்போது, அவை மக்களிடையே புரிதலையும் ஒற்றுமையையும் வளர்க்க முடியும் என்பதை ‘SeRasa SeRasi’ நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது. கலைக்கும் இசைக்கும் கலாசார எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் உண்டு என்பதையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக அரங்கேற்றிய கலை இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

Scroll to Top