என் தமிழ்

சிலாங்கூர் ம.இ.கா மாநாட்டை தொடங்கி வைத்தார் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

சிலாங்கூர், 05 அக்டோபர் 2026 : மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா.) சிலாங்கூர் மாநிலத்தின் 80-வது பிரதிநிதிகள் மாநாட்டை, ம.இ.கா. தேசியத் தலைவர் தான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஷா ஆலமில் உள்ள IDCC-யில் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாடு சிலாங்கூர் மாநில ம.இ.கா. உறுப்பினர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், தலைமைத்துவத்தை மேம்படுத்தவும், கட்சியின் எதிர்காலப் பயணம் மற்றும் சமூக நலனுக்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான தளமாகவும் அமைந்தது.

மாநாட்டில் உரையாற்றிய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், தற்போதைய சவால்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், கட்சிக்கும் சமூகத்திற்கும் வலுவான மற்றும் திட்டமிட்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

80-வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த சிலாங்கூர் மாநில ம.இ.கா. தலைவர் டத்தோ ஷங்கர் ராஜ் அயங்கர் மற்றும் மாநில ம.இ.கா. தலைமைத்துவத்தினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்வில் சிலாங்கூர் மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ வீரா மெகாட் ஸுல்கர்னைன், பாரிசான் நேஷனல் கூட்டணியின் நண்பர்கள் மற்றும் எம்.சி.ஏ. தலைவர்கள், ம.இ.கா. மத்திய தலைமைத்துவ உறுப்பினர்கள், சிலாங்கூர் மாநில, தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Scroll to Top