என் தமிழ்

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் டிரெய்லர் வெளியானது

தமிழ்நாடு, 05 அக்டோபர் 2026 : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

டிரெய்லரில் ஓய்வு பெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் தோன்றுகிறார். முதல் பாகத்தைப் போலவே அதிரடி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதுடன், கதையின் அடுத்த கட்டத்தை வெளிப்படுத்தும் வகையிலும் டிரெய்லர் அமைந்துள்ளது.

ரஜினிகாந்துடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Scroll to Top