என் தமிழ்

BHPetrol போட்டியில் SJKT சரஸ்வதி தேசியவகை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

கெடா, 05 அக்டோபர் 2026 : BHPetrol 2026 மாவட்ட அளவிலான ‘Cerah Ceria Bersama BHPetrol’ நிகழ்ச்சியில் SJKT சரஸ்வதி தேசியவகை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி செக்கோலா கெபாங்சான் இப்ராஹிமில் நடைபெற்ற கோலா மூடா மாவட்ட அளவிலான போட்டியில், பள்ளி மாணவர்கள் வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர்.

வண்ணம் தீட்டும் போட்டியில் 5 எலாங்கோ வகுப்பு மாணவர் தஸ்வின்ஸ்ரீ குமார் வேல் முதல் இடத்தையும், 5 பாரதி வகுப்பு மாணவர் ஜாஸ்வந்த் சாய் ஜீவபாலன் இரண்டாம் இடத்தையும், 5 கம்பர் வகுப்பு மாணவி நிரஞ்சனஸ்ரீ அருள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

கட்டுரை எழுதும் போட்டியில் 6 எலாங்கோ வகுப்பு மாணவி தனுஷ்ரி புகனேஸ்வரன் முதல் இடத்தையும், 6 கம்பர் வகுப்பு மாணவி சுகாசினி செல்வராஜு இரண்டாம் இடத்தையும், அதே வகுப்பைச் சேர்ந்த சிவானி விக்னேஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மாணவர்களின் முயற்சி, படைப்பாற்றல் மற்றும் திறமையைப் பாராட்டிய பள்ளி, இந்த வெற்றி மற்ற மாணவர்களுக்கும் தொடர்ந்து முயற்சி செய்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க ஊக்கமளிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்புக்கு ஆதரவளித்த அனைவருக்கும் பள்ளி சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

Scroll to Top