இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 45 கி.மீ. நீள பாதுகாப்பு வேலி சேதம்

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 45 கி.மீ. நீள பாதுகாப்பு வேலி சேதம்

4

 

காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழையில் எல்லைப்பகுதியில் 45 கிலோ மீட்டர் நீளத்துக்கு பாதுகாப்பு வேலி நாசமானது.வெள்ள சேதத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான் எல்லை வழியாக அத்துமீறி நுழைய முயன்ற 5 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். மேலும், 200 தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ காத்திருப்பதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலும், சர்வதேச எல்லையிலும் 50 கி.மீ. தொலைவுக்கு பாதுகாப்பு வேலிகள் வெள்ளத்தால் சேதமடைந்திருப்பதாக ராணுவம் கூறி உள்ளது.

ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதியில் கார்கில் முதல் மாலு (அக்னூர்) வரையிலான 734 கி.மீ. தொலைவுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போல, மாலு முதல் பஞ்சாப் வரை 190 கி.மீ. தொலைவுக்கு சர்வதேச எல்லையிலும் பாதுகாப்பு வேலிகள், வெள்ளத்திலும் ஒளிரக்கூடிய அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 20 முதல் 25 கி.மீ. வரையிலும், சர்வதேச எல்லையில் 14 முதல் 15 கி.மீ. வரையிலும் பாதுகாப்பு வேலிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இவ்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.