தமிழ்நாடு, 28 செப்டம்பர் 2026 : தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்ததுடன், சில குழந்தைகளுக்கு பெயரும் சூட்டினார். பின்னர் திட்டத்தின் பயனாளிகளான குழந்தைகள் மற்றும் அவர்களது தாய்மார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.







