ஷாஆலம், சிலாங்கூர்- இன்று 21/9/2014 காலை SITF ‘Special Implementation Task Force ஆதரவுடன் தமிழ் மணி மன்ற ஏற்பாட்டில் புதியதோர் சமுதாயம் என்ற தலைப்பில் மருத்துவ மற்றும் சமூக முகாம் தாமான் ஸ்ரீ மூடா (2) பள்ளியில் நடத்தப்பட்டது. 800 பேர் கலந்துகொண்ட இந்த முகாமில் பல்வேறு மருத்துவ பரிசோதனை மற்றும் சமுதாய ஆலோசனை சந்திப்புகள் நடத்தப்பட்டன. மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் S.சுப்ரமணியம் அவர்கள் இந்நிகழ்வை துவக்கி வைத்தார். ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.C.சிவராஜ் மற்றும் பல பிரமுகர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
“இந்திய சமுதாயத்தில் சுகாதார விழிப்புணர்வு அதிகம் தேவை. நம் நாட்டில் இந்தியர்களுக்கு அதிகமான உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன .நம் வாழ்க்கை முறைகளில் பெரிய மாற்றம் தேவை.நம் உடலை நாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் வரவேண்டும். உணவு முறையில் மாற்றங்கள் அத்திய ஒன்றாகும். உடற்பயிற்சி நோயற்ற வாழ்வுக்கு அவசிய தேவையாகும்” என மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் S.சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்தார்.