என் தமிழ்

SJKT – லாடாங் டைமண்ட் ஜூப்ளி தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் புதிய கணினி அறை திறப்பு : இளம் தொழிலதிபர் உமாசதீஷ் சன்னாசி நிதியுதவி

மெலாக்கா, 18 செப்டம்பர் 2026 : SJKT லாடாங் டைமண்ட் ஜூப்ளி தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கணினி அறை “CYBER SPACE USG87” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளம் தொழிலதிபர் திரு. உமாசதீஷ் சன்னாசி மற்றும் அவரது துணைவியார் திருமதி சிசிலியா சோமலா @ பிரான்சிஸ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவி திருமதி ரேவதி இளையராஜ் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் டத்தோ எஸ். பெரியமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கற்றலுக்கு உதவும் வகையில், பள்ளியின் கணினி அறை புதுப்பிக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கணினி தொடர்பான அறிவு மற்றும் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கணினி அறையைப் புதுப்பித்து புதிய தோற்றத்தில் அமைப்பதற்கான முழுச் செலவையும் இளம் தொழிலதிபர் உமாசதீஷ் சன்னாசி ஏற்றுக்கொண்டார். அவரது தாராளமான பங்களிப்புக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சமூகத்தினர் வழங்கும் ஆதரவு தொடர்ந்து ஊக்கமளிப்பதாக அமைந்துள்ள நிலையில், புதுப்பிக்கப்பட்ட கணினி அறை மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top