என் தமிழ்

நஜிப் ரசாக் வீட்டுக் காவல் ஆவணம் : கையெழுத்திட்டதாக கூறப்படுவதை ஹன்னா இயோ மறுத்தார்

கோலாலம்பூர், 18 செப்டம்பர் 2026 : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் எந்தவொரு உத்தரவு ஆவணத்திலும் தான் கையெழுத்திடவில்லை என்று பிரதமர் துறை (கூட்டரசுப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ மறுத்துள்ளார்.

இது தொடர்பாக ஹன்னா இயோ இன்று அதிகாலை தனது X சமூக ஊடகப் பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் வீட்டுக் காவல் உத்தரவில் தான் ஒருபோதும் கையெழுத்திடவில்லை என்று அவர் தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பான வீட்டுக் காவல் உத்தரவு எனக் கூறப்படும் ஆவணம் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அதில் தனது கையெழுத்து இருப்பதாக கூறப்படுவதை ஹன்னா இயோ மறுத்துள்ளார்.

Scroll to Top