என் தமிழ்

ஸ்ரீ பாலசுந்தர செல்வ விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா : மலேசிய இந்து சங்க நிர்வாகிகளுக்கு கோவில் நிர்வாகம் மரியாதை

பினாங்கு, 17 செப்டம்பர் 2026 : பட்டர்வொர்த், ஜாலான் பா அபுவில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு பாலசுந்தர செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில் மலேசிய இந்து சங்கம் (MHS) பட்டர்வொர்த் மன்ற நிர்வாகிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட மலேசிய இந்து சங்கம் பட்டர்வொர்த் மன்றத் தலைவர் சங்க ரத்னா தேவரம் நாயகம் டத்தோ ஜி. சண்முகநாதனுக்கு ஆலய நிர்வாகக் குழுவினர் சிறப்பு மரியாதை அளித்தனர்.

ஆலய நிர்வாகத்தின் அன்பான அழைப்புக்கும் மரியாதைக்கும் மலேசிய இந்து சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், ஆலயத்திற்கும் சங்கத்திற்கும் இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு மலேசிய இந்து சங்கம் பட்டர்வொர்த் மன்றத்தின் கோவில் ஒருங்கிணைப்பு பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Scroll to Top