என் தமிழ்

SS2 செலாடன் மக்களுடன் ஹரி மலேசியா கொண்டாட்டம் : கோபிந்த் சிங் டியோ பங்கேற்பு

சிலாங்கூர், 16 செப்டம்பர் 2026 : SS2 செலாடன் பகுதியில் நடைபெற்ற ஹரி மலேசியா கொண்டாட்டத்தில் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டு அப்பகுதி மக்களுடன் நேரத்தை செலவிட்டார். எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி, potluck முறையில் உணவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

சமூகத்தினருடன் நேரத்தை செலவிட்ட கோபிந்த் சிங் டியோ, அண்டை வீட்டாரிடையே நல்லுறவும் ஒற்றுமையும் நிலவுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும், இதுபோன்ற ஒன்றுகூடல்கள் சமூகத்தில் உள்ள மக்களிடையே நட்பையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதுடன், நாட்டின் ஒற்றுமையும் சமூகத்திலிருந்தே தொடங்குகிறது என்பதை நினைவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் ஹரி மலேசியா வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், சமூக ஒற்றுமையை தொடர்ந்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

Scroll to Top