கோலாலம்பூர், 14 செப்டம்பர் 2026 : கோலாலம்பூர் தேசிய நூலகத்தின் அரங்கில் ‘நித்திரைக் கதைகள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கமான PERTAMA WP ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து கொண்டு நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
சமூகத்தில் வாசிப்பு கலாசாரத்தை தொடர்ந்து வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வாசிப்பு அறிவை அதிகரிப்பதுடன், சிந்தனைத் திறனை மேம்படுத்தி, கற்பனைத் திறனை விரிவுபடுத்துவதோடு படைப்பாற்றலையும் வளர்க்கிறது. குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்த்து, அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக வாசிப்பு கலாசாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.







