கோலாலம்பூர், 12 செப்டம்பர் 2026 : சர்வதேச முதியோர் தினம் 2026-ஐ முன்னிட்டு, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளகத்தின் (KLSICCI) சமூக மற்றும் சமூக மேம்பாட்டுக் குழு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘சர்வதேச முதியோர் தினம்’ ஆண்டுதோறும் முதியோரின் முக்கியத்துவத்தையும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் அவர்கள் ஆற்றியுள்ள மதிப்புமிக்க பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி, வரும் அக்டோபர் 10-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோலாலம்பூரில் உள்ள Royal Selangor Club-ன் Cardroom பகுதியில் நடைபெறுகிறது.
முதியோரின் பங்களிப்புகளை கௌரவிப்பதுடன், வயதான மக்கள்தொகையால் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
முதியோரை கௌரவித்து, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் மரபையும் கொண்டாடுவதோடு, அனைத்து தலைமுறையினரையும் மதித்து, அவர்களுக்கு அதிகாரமளிக்கும் சமூகத்தை உருவாக்குவதன் அவசியத்தையும் இந்நிகழ்ச்சி வலியுறுத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் ஏற்பாட்டாளர்கள் வழங்கிய பதிவு படிவத்தின் மூலம் தங்களது பங்கேற்பை பதிவு செய்து கொள்ளலாம்.








