லண்டன், 12 செப்டம்பர் 2026 : இங்கிலாந்தில் நடைபெறும் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் 6 நாள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் நடைபெறும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தில் அவர் பங்கேற்கிறார். அப்போது பந்தயத்தை தொடங்கி வைக்கும் வகையில் பச்சைக்கொடி காட்டுகிறார். இந்தப் போட்டியில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்கிறார். இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கும் பந்தயம், இரவு 11.45 மணி வரை நடைபெறுகிறது.
மேலும், சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தின் கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பந்தயங்களை நடத்தும் விதம் குறித்து முதலமைச்சர் விஜய் பார்வையிட உள்ளார். தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான மோட்டார் பந்தய நகரம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் பயணம் அதனுடன் தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது.







