அட்லிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

அட்லிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

news8

முன்னாள் மாணவர் தலைவர் ஆடாம் அட்லி தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளார் என்று தீர்மானித்த கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 12 மாத கால சிறைத்தண்டனை விதித்தது. அரசு தரப்பு அதன் குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது என்று செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி மட் கனி அப்துல்லா கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடந்த ஒரு செராமாவில் அம்னோ மற்றும் பின் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் தேச நிந்தனை அறிக்கையை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆடாமின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் லத்தீபா கோயா, ஆடாம் இன்னும் சட்டம் பயிலும் மாணவராக இருக்கிறார் என்றும், இது அவர் புரிந்துள்ள முதல் குற்றம் என்பதாலும் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக அபராதம் விதிக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டார். ஆனால், அரசு தரப்பில் வாதிட்ட முகமது அபாஸாபிரீ முகமது அபாஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்று ஆடாம் வலியுறுத்தியது கடுமையான குற்றமாகும். ஆகவே, அவருக்கு சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.