யாரெல்லாம் உணவை வீணாக்குகின்றார்களோ, அவர்களுக்கெல்லாம் அபராதம் விதிக்க வேண்டும் என்று மலேஷியா முஸ்லீம் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் சமூக ஆர்வலர் டத்தோ நஜிம் ஜோகன் கூறியுள்ளார். உணவு வீணாக்கப்படுவது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே தனது முதல் குறிக்கோளாகும். உணவை வீணாக்கி வெளியில் கொட்டுவதைப் பார்க்க தனக்கு வறுத்தமாக இருக்கிறது என்றார். இது குறித்து மக்களுக்கு வலுவான ஒரு தகவலைத் தெரிவிக்கவேண்டும் என்று விரும்பியதாகக் கூறினார். வளர்ந்த நாடான ஜப்பானில் விருந்துகளில் உணவை வீணாக்க்கும் அளவிஅ பொருத்து அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் இதை நாம் எடுத்துகாட்டாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
Previous Post: மலேசியாவிற்க்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.
Next Post: இடி மற்றும் கனமழையால் கார்கள் சேதம்