என் தமிழ்

ஸ்டார் சிங்கர், திருமுறை ஓதுதல், சிலம்பம் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு SJKT : லாடாங் டைமண்ட் ஜூபிலி தேசிய வகை தமிழ்ப் பள்ளியில் கௌரவிப்பு

மலாக்கா, 08 செப்டம்பர் 2026 : SJKTலாடாங் டைமண்ட் ஜூபிலியில் மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு லாடாங் டைமண்ட் ஜூபிலி: எஸ்.ஜே.கே.டி. லாடாங் டைமண்ட் ஜூபிலி பள்ளியின் 31-ஆவது வாராந்திர ஒன்றுகூடலின்போது, கடந்த வாரம் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற ஸ்டார் சிங்கர் பாடல் திறன் போட்டி, திருமுறை ஓதும் போட்டி மற்றும் சிலம்பப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற அதிகாரப்பூர்வ வாராந்திர மன்றம் போது, பள்ளித் தலைமையாசிரியை திருமதி விஜயா தாதன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் பாராட்டியதுடன், அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தது. மாணவர்களின் கல்வியுடன் இணைந்து கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.

Scroll to Top