சிலாங்கூர், 08 செப்டம்பர் 2026 : பாரா சுக்மா சிலாங்கூர் 2026 போட்டியின் பாரா டென்பின் பந்துவீச்சு பிரிவில் 8 தனிநபர் போட்டிகளுக்கான முடிவுகள் நேற்று (செப்டம்பர் 7) அறிவிக்கப்பட்டன. சன்வே மெகாலேன்ஸ் அரங்கில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களை வென்றனர்.
TPB2 பிரிவில் சபா வீரர் முஹம்மது ஹைக்கல் அசானி பின் அஸ்மான் தங்கப் பதக்கம் வென்றார். பேராக் வீரர்களான ஷைஃபுல் முஸ்தபா வெள்ளியும், நிஸாமுடின் ஷாஹிதின் வெண்கலமும் பெற்றனர்.
TPB4 ஆடவர் தனிநபர் பிரிவில் கெடா வீரர் ஜோஷ் டேனியல் ஷான் அ/லா ஷண்முகன் முதலிடத்தைப் பிடித்தார். சிலாங்கூரின் முஹம்மது ரஸீஃப் இஸ்கந்தர் அப்த் முயிஸ் வெள்ளியும், திரெங்கானுவின் முஹம்மது ஹாரித் அஸ்ஃபர் ஹஸ்லான் வெண்கலமும் வென்றனர்.



TPB4 மகளிர் பிரிவில் சரவாக் வீராங்கனை நூர் சியாஸ்வானி பிந்தி மராய்ஸ் தங்கம் வென்றார். சிலாங்கூரின் எலியானா பிந்தி ஜொஹாரி வெள்ளியும், சரவாகின் அஸீரா பிந்தி ஜலானி வெண்கலமும் பெற்றனர். TPB1 பிரிவில் சபாவைச் சேர்ந்த அஸுவான் பின் அமிர்ஹசன் தங்கப் பதக்கம் வென்றார். பகாங்கின் முகமட் சக்கானி பின் சப்பியான் வெள்ளியும், சபாவின் ரோலன் பின் மராக்கிம் வெண்கலமும் வென்றனர்.
TPB10 ஆடவர் பிரிவில் சிலாங்கூர் வீரர் முஹம்மது அமின் பின் அப்த் ரஷீத் தங்கம் வென்றார். மலாக்காவின் முகமட் ரேசா பின் ராபா வெள்ளியும், சிலாங்கூரின் சியாஸ்வான் அக்மல் பின் யஹ்யா வெண்கலமும் பெற்றனர்.
TPB10 மகளிர் பிரிவில் சரவாகின் நூர் அமலினா பிந்தி முகமட் மொசாடாட் முதலிடத்தைப் பிடித்தார். சிலாங்கூரின் நூர் ஹிதாயா பிந்தி சுலைமான் வெள்ளியும், சரவாகின் ரொஸ்ஸரின் இசாவெல் மனோங் அ/லா ரேமண்ட் வெண்கலமும் வென்றனர். TPB3 ஆடவர் பிரிவில் சபா வீரர் முஹம்மது அஸ்ரி பின் அஸ்மான் தங்கம் வென்றார். பகாங்கின் முகமட் ஹபிஸ் பின் முகமட் அலி வெள்ளியும், சரவாகின் முகமட் யாக்குப் பின் வைனி வெண்கலமும் பெற்றனர்.
TPB3 மகளிர் பிரிவில் சரவாகின் ஜாக்குலின் அ/லா கபோ தங்கப் பதக்கம் வென்றார். சபாவின் அதிரா பிந்தி அஸ்மான் வெள்ளியும், பகாங்கின் இந்தான் நூர் சியாகிரா பிந்தி ஸைனுடின் வெண்கலமும் வென்றனர்.
இப்போட்டிகளின் முடிவுகள் மூலம் சபா, சரவாக், சிலாங்கூர், பேராக், பகாங் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பாரா டென்பின் பந்துவீச்சில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.







