கோலாலம்பூர், 07 செப்டம்பர் 2026 : தொழில்முனைவோருக்கிடையே தொடர்புகளை உருவாக்கவும், வர்த்தக யோசனைகளைப் பகிர்ந்துகொள்ளவும், புதிய வாய்ப்புகளை ஆராயவும் ‘எம்ஏஐசிசிஐ தொழில்முனைவோர் உச்சி மாநாடு 2026’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்கும் சிறப்பு கலந்துரையாடல் அமர்வு இடம்பெறவுள்ளது. மேலும், தங்களது வர்த்தக யோசனைகள் மற்றும் தொழில் முயற்சிகளை முன்வைக்க விரும்பும் தொழில்முனைவோருக்காக ‘ஷார்க் டேங்க்’ பாணியிலான வர்த்தக முன்மொழிவு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்கியுள்ளவர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே வர்த்தகத்தை நடத்தி வரும் தொழில்முனைவோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தொழில்முனைவோர் திறந்த மனதுடன் தங்களது யோசனைகளுடன் கலந்து கொண்டு, புதிய தொடர்புகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ‘இணைவோம், ஒத்துழைப்போம், வளர்வோம்’ என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்நிகழ்வின் வர்த்தக முன்மொழிவு அமர்வுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய :
https://docs.google.com/…/1FAIpQLSf0NIVwoZl…/viewform…








