கோலாலம்பூர், 07 செப்டம்பர் 2026 : கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘ஹவுஸ் ஆஃப் காபி அண்ட் கேக்’ உணவகத்தை டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
தொழில்துறையில் சாதித்து, வெற்றியை நோக்கி பயணிப்பவர்களைக் காணும்போது பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுவதாக டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார். அந்த வகையில், ‘ஹவுஸ் ஆஃப் காபி அண்ட் கேக்’ நிறுவனத்தைத் தொடங்கியுள்ள பன்னீர் செல்வம் மற்றும் அவரது நண்பர்களுக்கு அவர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள இந்தப் புதிய உணவகம், நறுமணம் கமழும் காபி வகைகள், புதிதாக தயாரிக்கப்படும் கேக் மற்றும் பல்வேறு உணவு வகைகளை வழங்குகிறது. நண்பர்களுடன் சந்தித்து உரையாடுவதற்கும், அமைதியான சூழலில் தனிமையில் நேரத்தைச் செலவிடுவதற்கும் ஏற்ற இடமாக இது அமைந்துள்ளதாக சரவணன் குறிப்பிட்டார்.
தொழிலில் புதிய முயற்சியுடன் களமிறங்கியுள்ள பன்னீர் செல்வம் மற்றும் அவரது குழுவினர் தொடர்ந்து வெற்றிபெற வேண்டும் என்றும், இந்த உணவகம் சிறப்பாக வளர்ச்சியடைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.







