என் தமிழ்

மிஸ் வேர்ல்ட் 2026 : மலேசியாவின் தனுசியா செட்டி 3ஆம் இடம் பிடித்து சாதனை

வியட்நாம், 06 செப்டம்பர் 2026 : மிஸ் வேர்ல்ட் 2026 அழகிப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய தனுசியா செட்டி 3ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் மலேசியா ‘இரண்டாம் ரன்னர்-அப்’ பட்டத்தை வென்றுள்ளது. மிஸ் வேர்ல்ட் 2026 பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த அழகி வென்றுள்ளார்.

மலேசியாவின் தனுசியா செட்டி சிறப்பாகப் போட்டியிட்டு உலகின் முன்னணி மூன்று அழகிகளில் ஒருவராக இடம்பிடித்திருப்பது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றி மலேசிய அழகிப் போட்டி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ள நிலையில், தனுசியா செட்டிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to Top