சீனா, 03 செப்டம்பர் 2026 : China Masters 2026 பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவு 32-வது சுற்றில் மலேசியாவின் நூர் முகமது ஆஸ்ரியன் ஆயுப்-டான் வீ கியோங் ஜோடி வெற்றி பெற்றது. மலேசியாவின் மற்றொரு ஜோடியான ஆரோன் சியா-மான் வீ சோங் ஜோடியை எதிர்கொண்ட ஆஸ்ரியன்-டான் வீ கியோங் ஜோடி, 14-21, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள ஆஸ்ரியன்-டான் வீ கியோங் ஜோடி, புதிதாக இணைந்த ஆரோன் சியா-மான் வீ சோங் ஜோடிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.







