03 செப்டம்பர் 2026 : மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் புதிய தலைமையகத்தில் கிரஹப்பிரவேச விழா வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி புதன்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது. மாமன்றத்தின் புதிய தலைமையகத்தில் இறையருளுடனும் நல்லாசிகளுடனும் புதிய பயணத்தை தொடங்கும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.
விழா காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து காலை 9 மணி முதல் 9.30 மணி வரை பால் காய்ச்சும் நிகழ்வும், பின்னர் காலை 9.30 மணி முதல் 11 மணி வரை காலை உணவு வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.
இந்த மங்களகரமான கிரஹப்பிரவேச விழாவில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு புதிய தலைமையகத்தின் தொடக்க நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.







