என் தமிழ்

மலேசியாவின் ஒற்றுமை, அமைதியை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு : அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர், 29 ஆகஸ்ட் 2026 : மலேசியாவில் நிலவும் ஒற்றுமையும் அமைதியும் தானாகக் கிடைத்தவை அல்ல என்றும், ஒருவரை ஒருவர் மதித்து, புரிந்துகொண்டு அக்கறையுடன் செயல்பட்ட மக்களின் முயற்சியின் விளைவாகவே அவை உருவாகியுள்ளன என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் எண்ணங்களுக்கு இடமளிக்காமல், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, பகிர்ந்து, உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இனம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்தின் பலனை அனைத்து மக்களும் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மொழி விவகாரத்தில் மலாய் மொழி நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி என்ற நிலையில், அதற்கு உரிய மரியாதையையும் முக்கியத்துவத்தையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என அன்வார் குறிப்பிட்டார். அதேவேளை, ஆங்கிலம், மாண்டரின், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி பெறுவது அறிவு, சிந்தனை, கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

வலுவான தேசிய அடையாளத்துடன் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு, அனைவருக்குமான அமைதியான, ஒன்றுபட்ட மற்றும் முன்னேற்றமான மலேசியாவை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.

Scroll to Top