கோலாலம்பூர், 29 ஆகஸ்ட் 2026 : மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் (BAM) பயிற்சிக் குழுவில் டியோ கோக் சியாங் மற்றும் வோங் பெய் டி மீண்டும் இணைந்துள்ளனர். டியோ கோக் சியாங் கலப்பு இரட்டையர் பிரிவின் பயிற்சியாளராகவும், வோங் பெய் டி மகளிர் இரட்டையர் பிரிவின் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்க உள்ளனர்.
இருவரும் செப்டம்பர் 1 முதல் BAM அமைப்பில் தங்களது புதிய பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளனர். அனுபவம் வாய்ந்த இருவரும் மீண்டும் பயிற்சிக் குழுவில் இணைந்திருப்பது மலேசிய பேட்மிண்டனுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.









