மெலாக்கா, 27 ஆகஸ்ட் 2026 : மலேசிய தமிழ் இளைஞர் பெல் மன்றத்தின் மெலாக்கா மாநில செயற்குழு உறுப்பினர் நாதராஜன் சிவசாமிக்கு, 2026ஆம் ஆண்டுக்கான பி.ஜே.கே. (Pingat Jasa Kebaktian) பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மெலாக்கா மாநிலத்தின் விருதுகள், பதக்கங்கள் மற்றும் கௌரவங்களை வழங்கும் சிறப்பு விழா ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் நாதராஜன் சிவசாமிக்கு அவரது சேவை, அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்திற்காக ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டி பி.ஜே.கே. பதக்கம் வழங்கப்பட்டது.
சமூகத்திற்கும் நாட்டிற்கும் அவர் தொடர்ந்து ஆற்றிவரும் சேவைகளுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் பெருமைக்குரியது என மலேசிய தமிழ் இளைஞர் பெல் மன்றம் தெரிவித்துள்ளது. இந்த விருது மேலும் சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதற்கு ஊக்கமாக அமைய வேண்டும் என்றும், அவரது சேவைப் பயணம் தொடர்ந்து சிறக்க வேண்டும் என்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.







