என் தமிழ்

சிறப்பான சேவை : காளாமதி ரமேஷுக்கு 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை விருது

27 ஆகஸ்ட் 2026 : மலேசிய தமிழ் இளைஞர் பெல் மன்றத்தின் தேசிய இளைஞர் பொதுச் செயலாளரான திருமதி காளாமதி ரமேஷுக்கு 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை விருது வழங்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சமூகத்திற்கும் நாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது இந்தச் சாதனை மேலும் சிறப்பான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஊக்கமாக அமைய வேண்டும் என மலேசிய தமிழ் இளைஞர் பெல் மன்றத்தின் தலைவர் மற்றும் உயர்மட்ட மன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமூகத்திற்கும் நாட்டிற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பங்களித்து, மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் காளாமதி ரமேஷுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Scroll to Top