என் தமிழ்

வங்கிப் பணியாளர் தேர்விற்கு திருச்சியில் இலவச பயிற்சி

5

இந்திய வங்கிகளுக்கான பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஐபிபிஎஸ், கமர்சியல் அசிஸ்டென்ஸ் தேர்விற்கு செப்டம்பர் 27-ம் தேதி முதல் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகிறது.திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடைபெற உள்ள இந்த பயிற்சி வகுப்பில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இத்தகவலை திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

Scroll to Top