என் தமிழ்

FINAS புதிய தலைமையகத்தை திறந்து வைத்தார் அன்வார் : மலேசிய திரைப்படத் துறைக்கு புதிய கட்டமைப்பு

சிலாங்கூர், 25 ஆகஸ்ட் 2026 : மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆகஸ்ட் 24, 2026 அன்று டாமன்சாராவில் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS-ன் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். நாட்டின் திரைப்படம் மற்றும் ஒளி-ஒலி துறையை ‘ஆரஞ்சு பொருளாதாரம்’ என்ற கட்டமைப்பின் கீழ் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

FINAS தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், Malayan Film Unit–Filem Negara Malaysia நிறுவனத்தின் 80 ஆண்டுகால பாரம்பரியத்தையும் நினைவுகூரும் வகையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடத்தில் இரண்டு ஸ்டூடியோக்கள், 300 இருக்கைகள் கொண்ட பி. ராம்லீ டிஜிட்டல் திரையரங்கு, அருங்காட்சியகம் மற்றும் 81,770 ஆவணங்களைக் கொண்ட திரைப்படக் காப்பகம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Scroll to Top