என் தமிழ்

அமெரிக்கா–ஈரான் மோதலால் உலக பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும் அபாயம்

25 ஆகஸ்ட் 2026 : ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா புதிய கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ஈரான், அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்தால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படாது என எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமடைந்தால் உலக பொருளாதாரத்தில் புதிய நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

Scroll to Top