என் தமிழ்

சிலாங்கூர் அணிக்கு 10-வது முறையாக SUKMA சாம்பியன் பட்டம்!

25 ஆகஸ்ட் 2026 : சிலாங்கூரில் நடைபெற்ற 22-வது மலேசிய விளையாட்டு விழா (SUKMA) 2026-ல், சிலாங்கூர் அணியினர் அபாரமான சாதனை படைத்து, 10-வது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஷா ஆலத்தில் உள்ள அனேகா வாக் (Aneka Walk) பகுதியில் கோலாகலமாக நடைபெற்ற நிறைவு விழாவில், சிலாங்கூர் அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. விழாவில் சிலாங்கூர் ராஜகுமாரர் தெங்கு அமீர் ஷா இப்னி சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா அல்-ஹாஜ் கலந்து கொண்டு, சிலாங்கூர் அணிக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சிலாங்கூர் மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிருதீன் ஷாரி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டித் தொடரில் சிலாங்கூர் அணி மொத்தம் 245 பதக்கங்களை குவித்து அசத்தியது:

🥇 101 தங்கப் பதக்கங்கள்
🥈 73 வெள்ளிப் பதக்கங்கள்
🥉 71 வெண்கலப் பதக்கங்கள்

வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் முழு சிலாங்கூர் விளையாட்டு அணியின் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் போராட்ட குணத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. சிலாங்கூர் மீண்டும் ஒருமுறை வரலாறு படைத்துள்ளது.

Scroll to Top