என் தமிழ்

SUKMA XXII 2026 : ஜோகூர் அணிக்காக 1,500 மீட்டரில் தங்கம், 800 மீட்டரில் வெள்ளி வென்ற போவன் குமார்

ஜோகூர், 22 ஆகஸ்ட் 2026 : SUKMA XXII 2026 போட்டியில் ஜோகூர் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய போவன் குமார் அ/ல் முத்து, தடகளப் போட்டியில் சிறப்பான சாதனையைப் பதிவு செய்து இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். Telok Sengat Palm Oil Mill, BPlant நிறுவனத்தில் பணியாற்றும் முத்து அ/ல் சுப்ரமணியத்தின் மகனான போவன் குமார், ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3 நிமிடங்கள் 58.77 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை நடைபெற்ற ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் களமிறங்கிய அவர், சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டு பதக்கங்களை வென்றுள்ள போவன் குமாரின் இந்தச் சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் ஜோகூர் மாநில அணிக்கும் BPlant நிறுவன ஊழியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால போட்டிகளிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Scroll to Top