சிலாங்கூர், 06 அக்டோபர் 2026 : சிலாங்கூரில் உள்ள கோலா சிலாங்கூர் சாலையில் (Jalan Kuala Selangor), FT54 பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் தொடர்பாக, மலேசியாவின் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, வெள்ளம் தொடர்பான விவரங்கள் குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அந்தச் செய்தியாளர் சந்திப்பின் காணொளியும், செய்தியில் பயன்படுத்துவதற்கான புகைப்படங்களும் ஊடகங்களுடன் பகிரப்பட்டுள்ளன. வெள்ளப் பாதிப்பு, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடைய விவரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் செய்தியாளர் சந்திப்பின் காணொளியில் இடம்பெற்றுள்ளன.










