என் தமிழ்

கன்னியாகுமரியில் பெண்ணிடம் நகைப்பறிப்பு!

6

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன்(63), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி ராஜலட்சுமிபாய் (57). இவர்கள் இருவரும் நேற்று பிற்பகலில் வீட்டிலிருந்து அருகில்  உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த நபர் ராஜலட்சுமிபாய் மீது மோதி கீழே தள்ளினார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து குணசீலன் திருவட்டாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Scroll to Top