என் தமிழ்

மலேசியாவுக்கு தங்கம் வென்ற தநுஸ்ரீ இந்திரன் : சர்வதேச ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அசத்தல்

05 ஆகஸ்ட் 2026 : மலேசிய அணிக்காக போட்டியிட்ட சிம்பாங் லிமா தமிழ்ப்பள்ளி (SJK(T) Simpang Lima) ஆறாம் ஆண்டு பாரதியார் வகுப்பு மாணவி தநுஸ்ரீ இந்திரன், 3வது JanjiAI Petrina Cup மலேசிய சர்வதேச ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை கோலாலம்பூரின் புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற இந்த சர்வதேச போட்டியில், பந்து (Ball Routine) பிரிவில் சிறப்பாக செயல்பட்ட தநுஸ்ரீ இந்திரன் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவரது கடின உழைப்பு, திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த வெற்றி, பள்ளியின் பிற மாணவர்களுக்கும் உயர்ந்த இலக்குகளை நோக்கி பாடுபட ஊக்கமளிக்கும் என பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அரங்கில் மலேசியாவின் பெயரை உயர்த்திய தநுஸ்ரீ இந்திரனுக்கு பள்ளி சார்பிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பிலும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Scroll to Top