என் தமிழ்

நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளிகளில் MITRA கல்வித் திட்டங்களை ஆய்வு செய்த அமைச்சர் ரமணன்

29 ஜூலை 2026 : மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், நெகிரி செம்பிலானில் உள்ள செனாவாங் தோட்ட தமிழ்ப்பள்ளி மற்றும் செரம்பான் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு நேரில் சென்று, இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காக MITRA மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்தார்.

இரு பள்ளிகளுக்கும் MADANI Furniture Programme, Kalvi MADANI Initiative மற்றும் Smart Board Initiative ஆகிய திட்டங்களின் கீழ் மொத்தம் RM345,900 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Kalvi MADANI திட்டத்தின் மூலம் மொத்தம் 120 மாணவர்கள் கல்வி உதவிகளைப் பெற்றுள்ளனர். மேலும், மேசை, நாற்காலி, வெள்ளைப்பலகை, அலமாரி, உணவக வசதிகள் மற்றும் கணினி அறை உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், இரு பள்ளிகளுக்கும் தலா RM12,500 மதிப்பிலான Smart Board வழங்கப்பட்டுள்ளதுடன், மொத்தம் RM25,000 செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த நவீன கற்றல் வசதி, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஊடாடும் மற்றும் பயனுள்ள வகையில் பாடங்களை கற்பிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டது.

MITRA வாயிலாக இந்திய சமூக மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்கி, சிறந்த கல்வி வாய்ப்புகளை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருவதாக டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Scroll to Top