25 ஜூலை 2026 : பஹாங் மாநில இந்தியத் தொழில்முனைவோருக்காக MAICCI (மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளின் கூட்டமைப்பு) ஏற்பாடு செய்யும் ‘MUDRA’ சாலைநிகழ்ச்சி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தெமர்லோவில் உள்ள ஹோட்டல் கிரீன் பார்க் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தொழில் தொடங்குதல், விரிவாக்கம், நிதியுதவி, அரசு ஊக்கத்தொகைகள் மற்றும் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமிருந்து தொழில்முனைவோர் நேரடியாகப் பெற முடியும்.
இந்த நிகழ்வில் SME Bank, TEKUN Nasional, Amanah Ikhtiar Malaysia (AIM), Bank Rakyat, SME Corp Malaysia மற்றும் மலேசிய கூட்டுறவு ஆணையம் (SKM) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தொழில்முனைவோரின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளனர்.
பஹாங் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை, மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளின் கூட்டமைப்பான MAICCI-யுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியத் தொழில்முனைவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிந்து, தங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.







