பத்து குகைகள், 18 ஜூலை 2026 : ஸ்ரீ முருகன் சென்டர் (SMC) சார்பில் நடைபெறவுள்ள “கல்வி யாத்திரை” நிகழ்வை முன்னிட்டு, அதற்கான ஒருங்கிணைப்பு பணிகளுக்காக “ஒற்றுமை யாத்திரை” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஸ்ரீ முருகன் சென்டர் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து பங்கேற்க உள்ளனர்.
இந்திய சமூகத்தின் ஒவ்வொரு இல்லத்திற்கும் ஸ்ரீ முருகன் சென்டரின் கல்வி யாத்திரையின் நோக்கம் மற்றும் அதன் உணர்வை கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
கல்வி யாத்திரையை சிறப்பாக நடத்துவதற்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்படுத்தல் பணிகள் குறித்து ஒற்றுமை யாத்திரையின் போது ஆலோசிக்கப்பட உள்ளன. இந்திய சமூகத்திற்கு அர்த்தமுள்ள மற்றும் ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கப்படும் இந்த “ஒற்றுமை யாத்திரை”, 02.08.2026 அன்று காலை 7 மணிக்கு பத்து குகைகள் (Batu Caves), மலேசியாவில் நடைபெற உள்ளது.






