என் தமிழ்

செனாய் தேர்தல் பிரச்சாரம் : வோங் போர் யாங்கிற்கு ஆதரவு கோரி கோபிந்த் சிங் டியோ அழைப்பு

ஜோகூர், 10 ஜூலை 2026 : ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு செனாய் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டதற்கு டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நன்றி தெரிவித்துள்ளார்.

செனாய் தொகுதி வேட்பாளர் வோங் போர் யாங், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் செனாய் மக்களுக்காக மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் மற்றும் வளர்ச்சி முயற்சிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமளித்ததாக அவர் கூறினார். செனாயில் வசிப்பவர்களும், வெளிநகரங்களில் வசிக்கும் தொகுதி வாக்காளர்களும் வாக்களிக்கும் நாளன்று தவறாமல் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என கோபிந்த் சிங் டியோ கேட்டுக்கொண்டார்.

மேலும், ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மீண்டும் ஆணை வழங்கி, செனாய் தொகுதியின் வளர்ச்சியைத் தொடர ஆதரவு அளிக்குமாறும் அவர் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Scroll to Top