என் தமிழ்

அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா–ஹங்கேரி உறுதி

புத்ராஜெயா, 08 ஜூலை 2026 : அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மலேசியாவுக்கான ஹங்கேரி தூதர் டாக்டர் சாண்டோர் சிபோஸ், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ சு. டாக்டர் நாகுலேந்திரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் ஏற்கனவே நிலவி வரும் ஒத்துழைப்பை மீண்டும் தீவிரப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர். மேலும், மலேசியா–ஹங்கேரி கூட்டு செயற்குழுவை அமைத்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக கலந்துரையாடவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்த முயற்சி, இரு நாடுகளின் அறிவியல் மற்றும் புத்தாக்கக் கொள்கைகளுக்கு ஏற்ப திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதோடு, எதிர்காலத்தில் பரஸ்பர நன்மை பயக்கும் வலுவான இருதரப்பு உறவை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Scroll to Top