என் தமிழ்

ஜோகூர் மாநிலத் தேர்தல் : ஹராப்பானுக்கு வாக்களிக்க பிரதமர் அன்வர் அழைப்பு

ஜோகூர், 06 ஜூலை 2026 : ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் தடையின்றி தொடர ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜோகூரின் செரோம் பகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தேர்தல் என்பது ஒரு கட்சி அல்லது வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நிகழ்வு மட்டுமல்ல என்றும், ஜோகூரின் எதிர்கால வளர்ச்சிப் பாதையையும், அடுத்த தலைமுறைக்கு வழங்கப்படும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான தருணம் என்றும் கூறினார்.

அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி, முதலீட்டாளர்களின் நம்பிக்கை, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்யும் ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், “ஜோகூர் முன்னேறட்டும்… நம்பிக்கைக்கு வாக்களியுங்கள்” என்ற முழக்கத்துடன், மாநிலத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக ஹராப்பான் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Scroll to Top