என் தமிழ்

ஜோகூர் மாநிலத் தேர்தல் : வெளிமாநில ஜோகூர்வாசிகள் வாக்களிக்க திரும்ப வேண்டும் – பிரதமர் அன்வர் அழைப்பு

ஜோகூர், 05 ஜூலை 2026 : ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் ஜோகூர்வாசிகள் அனைவரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் பங்கேற்க சொந்த ஊருக்குத் திரும்பி தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜோகூர் பாருவில் நடைபெற்ற ‘மலாம் அனாக் மூடா கெம்பாஸ்’ (Malam Anak Muda Kempas) நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜோகூரின் எதிர்கால வளர்ச்சிக்காக நேர்மையும், பொறுப்புணர்வும், அனைத்து மக்களுக்கும் சமமாக சேவை செய்யும் மனப்பான்மையும் கொண்ட பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வெறும் வாக்குறுதிகளை அளிக்கும் தலைமையை விட, மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக செயல்படும் தலைமைத்துவமே ஜோகூருக்கு தற்போது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஜோகூர் முன்னேறட்டும்… நம்பிக்கைக்கு வாக்களியுங்கள்” என்ற முழக்கத்துடன், ஜோகூரின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக ஹராப்பான் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Scroll to Top