என் தமிழ்

ஜோகூர் தேர்தல்: PH வேட்பாளர்களுக்கு கோபிந்த் சிங் தியோ வாழ்த்து

ஜோகூர், 28 ஜூன் 2026 : ஜோகூர் மாநிலத்தை மேலும் உறுதியான, முற்போக்கான, செழிப்பான மற்றும் வளமான நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கில், அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலம் முழுவதும் உள்ள 56 வேட்புமனு மையங்களிலும் இன்று வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, N48 ஸ்குடாய் தொகுதியில் பாகத்தான் ஹரப்பான்–DAP வேட்பாளராக போட்டியிடும் செல்வி கார்தியாயினி ஜெயபாலனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமைச்சர் ஸ்குடாய் வேட்புமனு மையத்திற்குச் சென்றார்.

அங்கு அவர், அனைத்து பாகத்தான் ஹரப்பான் வேட்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்கள் அனைவரும் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் ஒரே நோக்கத்துடன் தேர்தலில் களமிறங்கியுள்ளனர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்த தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் மக்களுக்கான அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் சேவை செய்வார்கள் என அவர் குறிப்பிட்டார். ஜோகூரின் எதிர்கால வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த தேர்தல், ஜோகூரின் அரசியல் முன்னேற்றத்திற்கும், மக்களின் நலனுக்கும் முக்கியமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

Scroll to Top